புதுகையில் முரசொலி மாறன் படத்திற்கு அமைச்சர் மரியாதை
புதுக்கோட்டை, ஆக.18: தமிழகத்தின் பல இடங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முரசொலி மாறன் உருவபடத்திற்கு மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், டாக்டர் முத்துராஜா எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், ஒன்றிய செயலாளர் சந்திரன், முன்னாள் சேர்மன் போஸ், நகர பொறுப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட திமுகவினர் ஏறாளமானோர் கலந்துகொண்டனர்.