புதுக்கோட்டையில் வாலிபர் சங்க மாவட்ட மாநாடு
புதுக்கோட்டை, செப்.17: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 17-ஆவது மாநாடு கறம்பக்குடியில் பேரணி-பொதுக்கூட்டத்துடன் நேற்று ஏழுச்சியுடன் தொடங்கியது. கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆருகில் இருந்து தொடங்கிய பேரணியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Advertisement
நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோரிக்கை முழக்கங்களுடன் வந்த இளைஞர்களின் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் வள்ளுவர் திடலை வந்தடைந்தது. பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில், மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான சின்னதுரை, சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவேலன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
Advertisement