கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க கூட்டம்
புதுக்கோட்டை, ஆக.15: புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க கூட்டம் மாநிலத் தலைவர் எஸ்.வீரமணி தலைமையில் நடைபெற்றது. மாநில தணிக்கையாளர் சின்னையன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஆர்எம்டி வடிவேலு, ஏ. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு 208 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை உதவி பராமரிப்பாளர் பணி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு வார விடுமுறை வழங்க கோரிக்கை, 50 சதவீத கால்நடை பணியாளர்களுக்கு பணி கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் நிரப்பப்படாமல் உள்ளதை நிரப்ப கோரிக்கை வைத்தனர்.