புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 470 கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் வழங்கல்
புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, கலெக்டர் அருணா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்ை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 470 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.