பொன்னமராவதியில் மா.கம்யூ. சீதாராம் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம்
பொன்னமராவதி, செப்.13: பொன்னமராவதியில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியன் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன் தலைமை வகித்தார்.
Advertisement
ஒன்றிய குழு உறுப்பினர்கள் நல்லதம்பி, குமார், மதியரசி, பாஸ்கர் லதா, கண்ணன் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமசாமி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement