இலுப்பூர் தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக்கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலுப்பூர், அக்.12: இலுப்பூர் தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக்கொள்வோம்’ என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் உத்தரவு படி இலுப்பூர் தீயணைப்பு நியைத்தில் வாருங்கள் கற்றுகொள்வோம் என்ற தலைப்பில் தீபாதுகாப்பு குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சியில் மின்சார தீ விபத்து, கேஸ் தீ விபத்து, வாகனங்கள் ஓட்டும் போது ஏற்படும் விபத்து, பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அவசர காலங்களில் தீயணைப்பான்கள் இயக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு இலுப்பூர் தீயணைப்பு நிலைய சார்பில் விளக்களிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியை மேற்பார்வையிட்ட புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி பொதுமக்களிடையே தீ பாதுகாப்பு குறித்த விளக்கமளித்தார். இதில், இலுப்பூர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.