புதுகை மாற்றுக்கட்சி வக்கீல்கள் திமுகவில் ஐக்கியம்
புதுக்கோட்டை, ஆக.11: புதுக்கோட்டை மாவட்டத்தில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த வக்கீல்கள் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். புதுக்கோட்டை மாவட்டதில், மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுகவில் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர்.
அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வக்கீல்கள் சங்கீதா, சத்யா, மஞ்சுளா, தேவிகா, அஞ்சலை, மன்மதன், மிர்ஷா ஹைதர் அலி, வீரமுத்து, கனிமொழி ஆகியோர் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர் ரகுபதி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது, திருமயம் சார்பு நீதிமன்ற அரசு வக்கீல் அரசமலை முருகேசன், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.