கந்தர்வகோட்டை-தஞ்சைக்கு நெடுஞ்சாலையில் தாழை வாரி பாலம் சேதம்
கந்தர்வகோட்டை, செப். 10: கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தாழை வாரி பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்து தடுக்க முன்னெச்சரிக்கை விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 226ல் உள்ள கந்தர்வகோட்டை தாழை வாரி பாலம் வாகனம் மோதி பெரும் சேதம் அடைந்து உள்ளது.
சாலையில் இருந்து பாலம் சுமார் முப்பது அடி அலமாக இருப்பதால், பொது மக்களும் வாகன ஓட்டிகளும் பாலம் அருகில் சோலர் மூலம் முன்னேச்சரிக்கை தரும் சிவப்பு நிற லைட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலை தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாகும்.
கன்னியாகுமரி முதல் வேளாங்கன்னி வரை வாகன போக்குவரத்து மிகுந்தது. இந்த சாலையில் அரசு பயணிகள் போக்குவரத்து வாகனங்களை விட கனரக வாகனங்கள் தான் அதிக அளவில் பயன்பட்டில் உள்ளது. இந்த சாலை நான்குவழி சாலையில் உள்ள தாழை வாரி பாலம் அருகில் குறுகிய நிலையில் இருப்பதால் நீண்டதூர வாகன ஒட்டிகள் நிலை தடுமாறி பாலத்தில் மோதி விபத்து ஏற்பாடுகிறது சிலநேரங்களில் உயிர் பலியும் ஏற்பட்டு உள்ளது.