அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி
அறந்தாங்கி, செப்.10: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(65). இவருக்கு சொந்தமான ஆடுகளை ஓட்டிக்கொண்டு நேற்று முன்தினம் மேய்சலுக்கு சென்றுள்ளார்.
Advertisement
அப்போது, ஆவுடையார் கோவில் பகுதிகளில் மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி உள்ளது. மின்னல் தாக்கியதில் 4 ஆடுகள் பலியானது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆறுமுகமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement