அறந்தாங்கியில் சினிமா தியேட்டரை முற்றுகை
அறந்தாங்கி, ஆக. 6: அறந்தாங்கியில் சினிமா தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள தியேட்டரில் கிங்டம் என்ற தமிழ் திரைபடம் தினசரி 3 காட்சிகள் காட்சியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்த தமிழ் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி காட்சி உள்ளதாகவும், இதனால் இந்த திரைபடத்தை காட்சிப்படுத்தக்கூடாது எனக்கூறி நேற்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவதுரைபாண்டியன், இப்ராகிம் ஆகியோர் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தியேட்டரை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்து தனியார் மஹாலில் வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள தியேட்டரில் 3 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.