பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா
பொன்னமராவதி, நவ.6: பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. ஐப்பசி மாதப்பௌர்ணமியை முன்னிட்டு பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோயில் முன்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி முன்பு பல்வேறு வகையான காய்கள் அளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வழிபாடுசெய்யப்பட்ட அன்னத்தை அமரகண்டான் குளத்தில் கரைத்து வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அன்னதான விழா நடைபெற்றது. இதே போல வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில்,மேலைச்சிவபுரி நகரசிவன் கோயில், செவலூர் பூமிநாதர் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது.