பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் தாய்பால் வார விழா
பொன்னமராவதி, ஆக.6: பொன்னமராவதியில் அரசு மருத்துவமனைகளில் தாய்பால் வார விழா கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி, வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி துர்கா மருத்துமனை ஆகிய மருத்துமனைகளில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. விழாவிற்கு பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்க தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார். பொருளார் ரமேஸ் முன்னிலை வகித்தார்.
அரசு தாலுகா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தமிழ்செல்வி கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களிடம் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி விளக்கிப் பேசினார். இதனைத் தொடர்ந்து டாக்டர் அழகேசன், பூலாங்குறிச்சி அரசு கலைக்கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஊட்டச்சத்து நிறைந்த பரிசு பெட்டகம் மற்றும் சேலை வழங்கினர். இதில், டாக்டர் செல்வக்குமார், முன்னாள் தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் இளையராஜா, அருண்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.