போலீஸ் விசாரணை மோகனூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி தொடக்கம்
கந்தர்வகோட்டை, ஆக. 5: தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு பணிபுரியும் இடங்கள், படிக்கும் இடங்கள் என எங்கும் பாலியல் ரீதியான தொல்லைகள் தினமும் நடந்துகொண்டுதான் உள்ளன. இதனால், அரசும், காவல்துறையும் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த கல்விநிலையங்களுக்கு போலீசார் அறுவுறுத்தியுள்ளது. இதனால், பள்ளிகள் தோறும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில், தற்காப்பு கலையையும் பள்ளிகளில் கற்றுத்தருகின்றனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மோகனூர் அரசு பள்ளியில் நேற்று கராத்தே பயிற்சி வகுப்பை துவங்கியுள்ளனர். இதனால், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் முப்பது மாணவிகளுக்கு முதற்கட்டமாக தற்காப்பு கலை கற்றுத் தரப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல், பட்டதாரி ஆசிரியை பகவதி, கராத்தே மாஸ்டர் நல்லையா பயிற்சி அளித்தார்.