வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, அக்.4: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.
Advertisement
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும், ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நேருக்கடிகள் ஏற்படுத்தவதை கைவிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement