தென்னை மரத்தில் கூடு கட்டிய விஷ வண்டு அழிப்பு
கறம்பக்குடி, நவ.1: கறம்பக்குடி அருகே தென்னை மரத்தில் விஷ வண்டு தீயணைப்பு துறை அழித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ராஜாலி விடுதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் விவசாயி இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் விஷ வண்டு கூடு கட்டிருப்பதாக தெரியவந்தது.
Advertisement
இதனையடுத்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கருப்பையா தலைமையில் தீயணைப்பு துறையினர் மரத்தில் கூடு கட்டிருந்த விஷ வண்டை தீயிட்டு அளித்தனர். விஷ வண்டை தீயிட்டு அழித்த தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர்.
Advertisement