விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆடு மீட்பு
விராலிமலை, நவ 1: விராலிமலை அருகே கிணற்றில் விழுந்த ஆடை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். விராலிமலை அருண்கார்டன் காந்தி நகரைச் சேர்ந்தவர் கூலையன் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று அதே பகுதியை சேர்ந்த 20 அடி ஆழம் 10 அடி அகலம் 10 அடி நீர் நிரம்பிய வட்ட கிணற்றுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு தவறி விழுந்து அலறி உள்ளது.
Advertisement
இதையடுத்து அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து உடனடியாக நிகழ்விடம் சென்ற நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான மீட்பு குழுவினர் இரவோடு இரவாக கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிய ஆடுவை உயிருடன் மீட்டனர்.
Advertisement