பொதுமக்கள் கோரிக்கை பொன்னமராவதியில் பேரூராட்சி சாதாரண கூட்டம்
பொன்னமராவதி, செப். 30: பொன்னமராவதி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேரூராட்சி மன்றத்தில் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெங்கடேஷ், செயல் அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கேசவன் தீர்மானங்கள் வாசித்தார். கூட்டத்தில், வரவு செலவு மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்பட்டது. மற்றும் சிறப்பு திட்டம் மற்றும் பிற பொருள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதர கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஷ்வரி, முத்துலெட்சுமி, இசா, சாந்தி, ராமநாதன், ராஜா, திருஞானம், ரவி, சந்திரா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.