உயர் மின்கோபுரம் விளக்கை சீரமைக்க வேண்டும்
கந்தர்வகோட்டை, செப். 30: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகர் ஊராட்சியில் மூன்று ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி, கிராம நூலகம். அஞ்சல் நிலையம், அரசு துவக்க பள்ளி அரசு உடைமையக்கப்பட்ட வங்கி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு உயர்தர சிகிச்சை, ஸ்கேன், மற்றும் சர்க்கரை, உப்பு போன்ற பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெளி நோயாளிகள் தினசரி நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்லுகிறார்கள். இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு செயல்படாததால், இரவு நேரத்தில் பேருந்துகளில் ஏறி செல்லவும் இறங்கிய மக்கள் ஊருக்குள் செல்லவும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருண்ட நிலையில் இப் பகுதி உள்ளது. ஆகையல், சம்பந்தபட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து உயர் மின்கோபுர விளக்கை சீர்செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.