பைக், கார் விபத்துகளில் நான்கு போர் காயம்
இலுப்பூர். அக்.29: இலுப்பூர் அன்னவாசல் அருகே பைக், கார் மோதிய விபத்திகளில் நான்கு போர் காயமடைந்தனர்.
இலுப்பூர் அருகே உள்ள கடம்பராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் 19. இவரது தாய் அமுதா 37. இருவரும் ஒரு பைக்கில் விராலிமலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது புதுக்கோட்டை - மணப்பாறை சாலை திருநாடு பிரிவு ரோடு அருகே சென்ற போது பைக் மீது கார் மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். காயம் அடைற்த தங்கவேல் மற்றும் அமுதா புதுக்கோட்டை அரசு மருத்தவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இலுப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.திருமயம் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் 70. இவரது மனைவி ஜெயந்தி 55. இருவரும் ஒரு பைக்கில் நெருஞ்சிகுடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு புதுக்கோட்டை மனப்பாறை சாலை புல்வயல் அருகே சென்ற போது அதன் வழியே வந்த கார் மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த இருவரும் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது குறிதது; அன்னவாசல் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.