விராலிமலையில் மதுபாட்டில் விற்றவர் கைது
விராலிமலை, அக். 28: விராலிமலை அருகே அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவரை மாவட்ட மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
விராலிமலை சுற்றுப்பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு தடையில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு விற்று வருவதாக மாவட்ட மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரூபி தலைமையிலான போலீஸார் விராலிமலை அடுத்துள்ள ராஜாளிபட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ராஜாளிபட்டி பகுதியைச் சேர்ந்த ரவி(55) அவரது வீட்டுக்கு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸார் அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்கு இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.