கந்தர்வகோட்டை வாரச்சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
கந்தர்வகோட்டை, அக்.28: கந்தர்வகோட்டை வார சந்தையில் காய்கறி விலை அதிகமாக இருந்ததால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் வாரம்தோறும் திங்கள்கிழமை வார சந்தை நடைபெறும். இங்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள், விவசாயிகள், சிறுரக வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களின் வந்து காய்கறி, கருவாடு, மீன், சோளப்பொறி பலசரக்கு பொருள்கள் விற்பனை செய்வர். இதனால், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்களில் வந்து பொருட்கள் வாங்கி செல்வர். இந்த வாரம் மழையின் காரணமாக கூட்டம் குறைந்தே காணப்பட்டது. காய்கறிகளில் விலை மழையின் கரணமாக உச்சத்தில் இருந்தது தக்காளி ரூ.50, 60 என இரண்டு விலையிலும், குவாலிட்டி வெங்காயம் 30, கந்தரிக்காய் 120, பின்ஸ், கேரட், கிலோ தல 100, உருளைக்கிழங்கு 40 முதல் 50 வரையும் விற்பனையானது. தேங்காய் கிலோ 80க்கும் விற்பனை ஆனது. கத்தரி, தேங்காய், தக்காளி, பீன்ஸ், கேரட் ஆகியவற்றின் விலை அதிகாமாக இருந்ததால், இல்லத்தரசிகள் கவலையடைந்தனர்.