முக்கண்ணாமலைப்பட்டி முகைதீன் ஆண்டவர் மலையில் கந்தூரி விழா கொடியேற்று விழா
Advertisement
இலுப்பூர், செப். 24:அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் முகைதீன் ஆண்டவர் மலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழா ரபியுல் ஆகீர் பிறை ஒன்றுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கந்தூரி விழா நேற்று துவங்கியது. இதைமுன்னிட்டு முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளி வாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டு தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றினர். பின்னர் துவா செய்து இனிப்புகள் வழங்கினர். இதில் திரளான ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். விழா துவங்கிய நாள் முதல் தினமும் 10 நாட்களுக்கு பள்ளி வாசலில் மவுலுது ஓதப்படுகிறது. வரும் 12 தேதி கந்தூரி விழா நடைபெறுகிறது
Advertisement