கலெக்டர் தகவல் வானதிராயன்பட்டி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளிடம் அளித்த 758 மனுக்களில் 144க்கு தீர்வு
விராலிமலை, செப் 3: விராலிமலை அருகே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 758 மனுக்கள் பெறப்பட்டதில், 144 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. விராலிமலை அடுத்துள்ள வானதிராயன்பட்டி, மேப்பூதகுடி ஆகிய ஊராட்சிகளை ஒன்றிணைத்து அத்திப்பள்ளம் அரசு பள்ளி அருகே நேற்று முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வருமானச்சான்று, பிறப்பிட சான்று, வகுப்பு சான்று, வீட்டுவரி ரசிது, மின் இணைப்பு பெயர் மாற்றம், கலைஞர் மகளிர் உரிமை தொகை, வேலை வாய்ப்பு, பட்டா மாறுதல், கலைஞர் வீடு உள்ளிட்ட 15 துறைகளின் கீழ் மேஜைகள் அமைக்கப்பட்டு 46 சேவைகள் வழங்கப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து 758 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 144 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.
வானத்திராயன் பட்டி முகாமில் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். ரவிசந்திரன் வழங்கினார்.முகாமில், முன்னாள் ஒன்றிய செயலாளர் மு.பி.மணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம். பழனியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ம.சத்தியசீலன் (கிழக்கு), அ.இளங்குமரன் (மேற்கு), கே.பி. அய்யப்பன் (மத்தியம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர். ரவிசந்திரன், எம். வள்ளியம்மை, தாசில்தார் ரமேஷ் மற்றும் ஏ.பி.ஆர்.ராஜங்கம், அன்பழகன், ஐஸ் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் சோமேஸ்கந்தர் (வானதிராயன்பட்டி), சக்தி சரணம்(கல்குடி), சண்முகம் (வடுகபட்டி), குமார்(மேப்பூதகுடி) உள்ளிட்டோர் செய்திருந்தனர்.