வந்தவாசி பகுதியில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
வந்தவாசி ஜூன் 23: வந்தவாசி பகுதியில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வந்தவாசி டவுன் தெள்ளார், அராசூர், மாம்பட்டு, தென்னாங்கூர், கீழ்கொடுங்காலூர், மருதாடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. கடந்த ஒரு வார காலங்களாக மழை பெய்தாலும் கோடை வெயில் தாக்கம் குறையாமல் இருந்தது. நேற்று பெய்த கனமழை கோடை வெப்பத்தை தனித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் வந்தவாசி நகரம் முழுவதும் சாலைகளில் மழைநீர் ஓடியது.
Advertisement
Advertisement