அரியலூரில் மக்கள் குறை தீர் கூட்டம்
01:59 AM Jun 12, 2025 IST
அரியலூர், ஜூன் 12: அரியலூர் மக்கள் குறை தீர் கூட்டத்தில் 19 புகார் மனுக்கள் வந்தன. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமை வகித்தார். இதில் 19 புகார் மனுக்கள் வந்தன. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.