எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்
கோவை, ஜூன் 20: கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி மேற்பார்வையில், எஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் முகாம் நடைபெற்றது. மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டது. இதில் குடும்ப பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பாக 81 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறு விசாரணை நடைபெற்றது. இவற்றில் 4 மனு மீது எப்ஐஆர், 1 மனு மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது. 59 மனுக்களுக்கு சுமூகமான தீர்வும், 17 மனுக்களுக்கு மேல் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement