அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சீருடை வழங்கல்
நாமக்கல், ஜூன் 6: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நாமக்கல் மலையாண்டித்தெருவில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது. இதில் மைய குழந்தைகளுக்கான சீருடை, முன் பருவக்கல்வி விளையாட்டு உபகரணங்களை மாநகராட்சி மேயர் கலாநிதி வழங்கினார். மாமன்ற உறுப்பினர் சரவணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சசிகலா, அழகம்மாள், பள்ளி தலைமை ஆசிரியை கிருத்திகா மற்றும் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல நாமக்கல் நகரில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், புதிய குழந்தைகள் சேர்க்கை, சீருடை வழங்குதல், முன்பருவக் கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் அனைத்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement