புதுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு மறியல்
இடைப்பாடி, ஜூலை 24: கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம், காரைக்காடு பகுதிகளில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் குடிநீர் பைப் லைன் இருந்தும் குடிநீர் சீராக கிடைக்கவில்லை எனக்கூறி நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். தகவலறிந்த கொங்கணாபுரம் போலீஸ் எஸ்ஐ ராமசாமி, புதுப்பாளையம் ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அன்புமணி ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீரான குடிநீர் வழங்க, கூடுதல் மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதையேற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Advertisement
Advertisement