வீட்டில் விபசாரம்; புரோக்கர் கைது
கோவை, ஜூலை 14: கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் எஸ்ஐஎச்எஸ் காலனியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.
பின்னர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் தூத்துக்குடியை சேர்ந்த அருள்பாண்டியன் (32) என்பதும், அவர் எஸ்ஐஎச்எஸ் காலனி காவேரி நகர் 5வது வீதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அருள்பாண்டியன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.