தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடுதுறையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை, ஏப். 24: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், யூனியன் கிளப், மயிலாடுதுறை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை மிட்டவுன் ஆகியவை இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்திட உள்ளது. 25.04.2025 வெள்ளிக்கிழமையன்று கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில், காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை குறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்காக 500-க்கு மேற்ப்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Advertisement

இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை பாஸ்போட் அளவு புகைப்படம். முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறவும்.

மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுகள் தங்களது சுய விளம்பரங்களை www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04364299790 / 9499055904 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்துறை நிறுவனங்களில் வேலைதேடும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News