தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அய்யம்பேட்டை அருகே தனியார் பஸ் டிரைவர் மீது தாக்குதல்: ஊழியர்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், ஜூன் 7: தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சின் டிரைவராக பாபநாசம் அருகே உத்தம தானபுரத்தை சேர்ந்த குணால் (25) என்ற டிரைவர் பேருந்தை ஓட்டிவந்தார். கண்டக்டராக அய்யம்பேட்டை அருகே ஈச்சங்குடியை சேர்ந்த கிரியோன் (29) கண்டக்டர். இந்த பஸ் அய்யம்பேட்டை அருகே நெடுந்தெரு சத்திரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸை வழிமறித்த சில வாலிபர்கள் பஸ்ஸில் ஏறி டிரைவர் குணாலை கைகளாலும் கட்டைகளாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதில் காயமடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்சை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.இதையறிந்த அந்த வழியாக வந்த மற்ற தனியார் பஸ் ஊழியர்கள் டிரைவரை தாக்கிய வாலிபர்களை உடனே கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News