பருவ மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு
Advertisement
அவிநாசி, அக்.5: மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைத்துறை அவிநாசி உட்கோட்டத்தின் சாலைகளில் மழைக்கால பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரம், அபாய எச்சரிக்கை தடுப்பான், சிவப்பு கூம்புகள், சாலைகளில் ஏற்படும் தடைகளை சரி செய்வதற்கான பொருள்கள் உள்ளிட்டவை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் பருவ மழைக்காலத்தில் சாலை ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவிநாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் செங்குட்டுவன், உதவிப்பொறியாளர் தரணிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Advertisement