தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரும் 2ம் தேதி பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம் கோடை விடுமுறை முடிவடைந்து

 

Advertisement

வேலூர், மே 26: கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் முடிந்து வரும் 2ம் தேதி மீண்டும் திட்டமிட்டபடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு சீருடைகளும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக தூய்மை பணிகள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகள், பலகைகள் என அனைத்தும் துப்புரவு செய்யப்பட வேண்டும். குடிநீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் துப்புரவு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும்.

கழிவறைகளை தூய்மைப்படுத்தி தேவையான வசதிகளை செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி புல் மற்றும் புதர்கள் அகற்றப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவர்கள் அனைவரும் சுத்தமான வகுப்பறைகளில் படித்து, பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டும். அதோடு மின் இணைப்புகளை சரிபார்த்து ஏதேனும் பழுதுகள் இருந்தால் சரிசெய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக பெற்றோருடன் கடைகளுக்கு சென்று பை, பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

Related News