வள்ளியூரில் நாளை மின்தடை
தியாகராஜநகர், ஜூன் 11: வள்ளியூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் செம்பாடூ மின் பாதையில் அவசர கால பணிகள் நாளை 12ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தெற்கு வள்ளியூர், வள்ளியம்மாள்புரம், மடப்புரம், முத்துராஜபுரம், கிழவனேரி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement