பேரையூரில் நாளை மின்தடை
திருமங்கலம், ஜூன் 12: பேரையூர் மற்றும் சாப்டூர் துணைமின்நிலையங்களில் நாளை ஜூன் 13ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி பேரையூர் நகர், சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, தும்மநாயக்கன்பட்டி, சாப்டூர் நகர் பகுதிகள், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையில் மின்தடை ஏற்படும் என திருமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement