மஞ்சூாில் நாளை மின்தடை
ஊட்டி, ஜூலை 14: குந்தா துணை மின் நிலையத்தில் நாளை 15ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதன்படி குந்தா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டக்கொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரக்குந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால்மட்டம், அறையட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு மற்றும் காயக்கண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.