சமயபுரத்தில் மின்நிறுத்த அறிவிப்பு ரத்து
திருச்சி, ஜூலை 9: சமயபுரத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி ரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையம் சார்பில் இன்று(ஜூலை 9) அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் செய்யப்படுவது, மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும். சமயபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என செயற்பொறியாளர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.