கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் தற்கொலை முயற்சியால் போலீசார் சோதனை தீவிரம்
கள்ளக்குறிச்சி, ஜூலை 8: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளையொட்டி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக மனு அனுப்பிவைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குறைதீர்வு நாளில் மனு அளிக்க வருகின்ற பொதுமக்கள் கடந்த மாதத்தில் மனு அளிக்க வருகின்றபோது ஒரு சிலர் சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெய் கேனை பையில் மறைத்து எடுத்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தற்கொலை முயற்சி சம்பவம் எதிரொலியாக அதனை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் பரிமளா தலைமையில் 10 போலீசார் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியை மேற்கொள்ள நிறுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செல்கின்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்து செல்லும் கைபைகளை தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர்.