சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளி மீது போக்சோ வழக்கு
திருப்பூர், மார்ச் 12: நேபாளை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூரில் உள்ள தனது தாயுடன் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சிறுமியின் தந்தை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், சிறுமியின் தாய் பீகாரை சேர்ந்த அபய்குமார் (40) என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அபய்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சிறுமி நேற்று கே.வி.ஆர். நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அபய்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement