பிளஸ்- 2 துணைத் தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது
ஈரோடு,ஜூலை10: ஈரோட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி துவங்கி 2ம் தேதி வரை நடந்தது. இதேபோல் பிளஸ் 1 துணை தேர்வு கடந்த ஜூலை 4ம் தேதி துவங்கி, நாளையுடன் நிறைவடைய உள்ளது. 10ம் வகுப்பு துணைத் தேர்வு இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையமாக ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையத்தில் உள்ள கிரேஸ் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 7ம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இப்பணியில் ஆசிரியை, ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 30 ஆயிரம் விடைத்தாள்கள் வந்துள்ளது. பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியும் இங்கு துவங்க உள்ளது. 10ம் வகுப்பு விடைத்தாள் மட்டும் வேறு மாவட்டத்தில் திருத்தும் பணி நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.