கிணத்துக்கடவில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு
கிணத்துக்கடவு, ஜூலை 9: கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய திட்டமாக விளங்கி வருவது, குறிச்சி, குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டமாகும். அம்பராம்பாளையம் பகுதியில் சுத்திகரிப்பு செய்து, குழாய்கள் மூலம் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிணத்துக்கடவில் உள்ள, பொள்ளாச்சி கோவை, சர்வீஸ் ரோட்டில், காவல் நிலையத்திற்கு அருகில், பிரதான குழாயில், திடீரென உடைப்பு ஏற்பட்டு, பேரூராட்சி, வணிக வளாகம் முன்புள்ள இந்த திட்டத்தின் பிரதான குழாயில், நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் ரோட்டில் ஆறாக ஓடியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் உடனடியாக கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கூறியதை தொடர்ந்து, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.