வீட்டுக்கு மின்கட்டணம் ரூ.67 ஆயிரம் வந்ததால் கலெக்டரிடம் மனு
ராமநாதபுரம், ஜூலை 23: மீனவரின் சுனாமி வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.67 ஆயிரம் வந்த விவகாரத்தில், மீனவர் குடும்பத்துடன் வந்து 2வது முறையாக ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்தார். மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் மீனவர்களுக்கு அரசு இலவசமாக கட்டிக் கொடுத்த சுனாமி வீட்டில் வசிப்பவர் மீனவர் ஷேக் ஜமாலுதீன். வழக்கமாக வீட்டுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை மின் கட்டணம் வரும்.
Advertisement
இந்நிலையில் கடந்த மாதம் மின் கட்டணம் ரூ.67 ஆயிரம் என பில் வந்தால், அதிர்ச்சி அடைந்த அவர், கட்டணத்தை குறைத்து முறையான மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்த்தில் கடந்த மாதம் 26ம் தேதி புகார் மனு அளித்திருந்தார்.
Advertisement