பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து
பாடாலூர், நவ.29:தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 27-ம் தேதி இவரது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல பெரம்பலூரில் கட்சி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான டி.ஆர்.சிவசங்கர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை சென்ற டி.ஆர்.சிவசங்கர், பசுமைவழிச் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பிறந்தநாள் பரிசாக புத்தகம் வழங்கினார். அதை பெற்று கொண்ட உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.சிவசங்கருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.