பெரம்பலூரில் தமுமுக 31ம் ஆண்டு துவக்க விழா
பெரம்பலூர், ஆக.29: பெரம்பலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதரசா சாலையில் தமுமுகவின் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முகமது அனிபா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அப்துல் அஜீஸ் வரவேற்று பேசினார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் முகமது இஸ்மாயில், சபியுல்லா, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பீர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் குதரதுல்லா தமுமுக கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். நகர நிர்வாகிகள் முகம்மது அனிபா, ஜாபர் அலி, முகிபுல்லா, சாகுல் ஹமீது, முஸ்தபா, யாசின், பேங்க் சாகுல், ஜகபர் அலி, கமாலுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நகரப் பொருளாளர் லியாகத் அலி நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.