துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து
பாடாலூர், செப் 27: பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான டி.ஆர்.சிவசங்கரின் மனைவி அழகுராணி. இவர் அண்மையில் மருத்துவத்துறையில் மயக்கவியல் படிப்பில் தேர்ச்சி பெற்று முதுகலை பட்டம் பெற்றார்.
Advertisement
இதையடுத்து தனது கணவருடன், மருத்துவப்படிப்பிற்கான முதுகலை பட்டத்துடன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதுகலை படிப்பிற்கான பட்டத்தினை அழகுராணி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்று அழகுராணிக்கு வாழ்த்து கூறினார்.
Advertisement