சு.ஆடுதுறையில் ஆலோசனை கூட்டம்
குன்னம், ஆக. 27: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாயம் செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று தேதி குறிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செயல் அலுவலர் பொறுப்பு அசலாம்பிகை அறங்காவலர் குழு தலைவர் கவியரசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 28ம் தேதி விழா நடத்தலாம் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன் ஜெயராமன் லட்சுமி ஹரி கிருஷ்ணன் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல், பண்ணை சக்திவேல் கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி கிராம ஊராட்சி செயலர் சுமதி செல்வம் கோயில் குருக்கள் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement