பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் பிறந்தநாள் விழா
பெரம்பலூர், ஆக 27: பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விநிறுவனங்களின் தலைவர் சேவைச் செம்மல் டாக்டர். திரு.சிவசுப்பிரமணியம் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்ட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் 72-பேர் இரத்ததானம் செய்தனர்.
Advertisement
மேலும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை சேர்ந்த மாணவ. மாணவியருக்கும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் மதிய உணவு, உடைகள் வழங்கினார். தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு பல்வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சார்ந்த தலைவர்கள் கட்சிநிர்வாகிகள். ஊடகத்தினர்கள். பொதுமக்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துகள் கூறினார்கள்.
Advertisement