தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள் 270 பேருக்கு விலையில்லா சைக்கிள்

 

Advertisement

பெரம்பலூர், நவ.25: பெரம்பலூர் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 4,530 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பெரம்பலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 2025-2026ஆம் ஆண்டிற்கான இலவச மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதிஆண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கும் விழா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை சார்பாக நேற்று திங்கட்கிழமை காலை பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, கலெக்டர் மிருணாளினி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இதில், அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 270 மாணவ, மாணவிகளுக்கு ரூ.13.04 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டுவருகிறது. அந்த வகையில், 2025-2026 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 2,070 மாணவர்களுக்கும், 2,460 மாணவிகளுக்கும் என மொத்தம் 4,530 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் 138 மாணவர்களுக்கு தலா ரூ.4,900 வீதம் ரூ.6,76,200 மதிப்பிலும், 132 மாணவிகளுக்கு தலா ரூ.4,760 வீதம் ரூ.6,28,320 மதிப்பிலும் என மொத்தம் 270 மாணவ, மாணவிகளுக்கு ரூ.13,04,520 மதிப்பிலான விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அட்மா தலைவர் ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தழுதாழை பாஸ்கர், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மீனாஅண்ணாதுரை, நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் சுவாமி முத்தழகன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) செல்வக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) லதா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி நன்றி கூறினார்.

 

Advertisement

Related News