ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் படிஇறக்கும் வைபவம் வரும் 27ம் தேதி சூரசம்சார விழா
ஜெயங்கொண்டம், அக்.23: ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் வரும் 27ம் தேதி சூர சம்ஹார விழா முன்னிட்டு படியிரக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக காலை 11 மணியளவில் அக்கோயிலில் படியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
விநாயகர் சுப்ரமணியர் வள்ளி தெய்வானை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பொன்பரப்பி உள்ளிட்ட பல்வேறு கிராம பொது மக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சூரசம்ஹார விழா கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு செய்திருந்தனர்
Advertisement