தடகளத்தில் முதலிடம் சு. ஆடுதுறை அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி
குன்னம், ஆக. 21: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தட்கள் போட்டியில் சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தடகள போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், மெட்ரிக் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் கலந்துக் கொண்ட தடகள போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட மகளிர் பிரிவில் மும்முறை தாண்டும் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கீர்த்தனா முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கீர்த்தனாவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.